இலங்கை அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்

575

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையின் தொடர் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் எனவும் கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.