“ஆயிரம் ஏக்கர் நிலத்தை திமுகவுக்கு கொடுக்க தயார்..” ராமதாஸ் டுவீட்..

402

பஞ்சமி நில விவகாரத்தில் வழக்கமான மிரட்டல் வேலையைச் தி.மு.க செய்துள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முரசொலி நிலத்தின் மூலப் பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையைத் தான் தி.மு.க செய்திருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார். மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுவது தான் அறம் என்று தெரிவித்தள்ளார்.

முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத தி.மு.க, தனக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக பேசுவதாகவும், அவ்வாறு நிலம் இருப்பதை நிரூபித்தால், அதனை அவர்களுக்கே கொடுத்துவிடுவதாக பதிவிட்டுள்ளார்.