ரமணா திரைப்பட பாணியில் உயிரிழந்தவருக்கு சிகிச்சை

897

தஞ்சையில் ரமணா திரைப்பட பாணியில் உயிரிழந்தவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை செய்வது போல் நடித்து, தனியார் மருத்துவமனை 5 லட்சம் ரூபாயை சுருட்டியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேகருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை ஐந்தரை லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளது. மேலும் பணம் கட்ட இயலாததால் சேகரை, உறவினர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்போவதாக மருத்தவர்களிடம் கூறியுள்ளனர்.

ஆனால் இதற்கு அனுமதி வழங்காத தனியார் மருத்துவமனை மேலும் ஏழரை லட்சம் வரை பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சேகரின் உறவினர்கள், சேகரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சேகரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் சேகர் இறந்து மூன்று நாட்கள் ஆகியதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்.

ரமணா திரைப்பட பாணியில் மருத்துவ மோசடியில் ஈடுபட்ட தஞ்சை தனியார் மருத்துவமனை குறித்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஒருவர் உயிரிழந்து மூன்று நாட்கள் ஆகியும், ரமணா திரைப்பட பாணியில் அவருக்கு சிகிச்சை அளிப்பது போல் நாடகமாடி, பல லட்சம் ரூபாய் பணத்தை தனியார் மருத்துவமனை சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of