உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் தான் ராமர் கோவில் விவகாரத்தில் அவசர சட்டம் குறித்து பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோவில் வழக்கில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையை உருவாக்கியதே தாமதத்திற்கு காரணம் என்றார். இந்த விவகாரத்தில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். நான்கு தலைமுறையாக நாட்டை ஆட்சி செய்தவர்களால் தான் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இல்லை என்றார். ரூபாய் நோட்டு நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் ஓராண்டுக்கு முன்பே மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். பாகிஸ்தான் ஒரே சர்ஜிக்கல் தாக்குதலில் மாறிவிடும் என்று நினைப்பது தவறு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.