படகுகளை மீட்க ராமேஸ்வர மீனவ குழு இலங்கை புறப்பட்டு சென்றது

396

இலங்கையில் உள்ள படகுகளை மீட்க மீனவர்கள் குழு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்கின்றனர். மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கம்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 14 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட 14 ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை மீட்டுவர மீனவர்கள் குழு புறப்பட்டு சென்றது.

9 விசைப்படகுகளில் சுமார் 70 மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டனர். மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் அழைத்து சென்று சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of