மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்..!

2350

பிரதமர் மோடி அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்பொருள்துறை அமைச்சராகவும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனராகவும் இருந்தவர் ராம்விலாஸ் பஸ்வான்.

பீகாரை சேர்ந்த இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார்.

இந்த தகவலை ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வான் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 8 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்விலாஸ் பஸ்வான், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி மத்திய அமைச்சர் பதவி வகித்து வந்தார்.

ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement