ஜெயலலிதா தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன்..! – அசத்தல் புகைப்படம் வெளியீடு..!

1345

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை கதையை மையமாக வைத்து பலரும் திரைப்படம் எடுக்க துவங்கியுள்ளனர்.

இதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் எடுத்து வருகின்றார், இப்படத்தில் ஹீரோயினாக கங்கனா நடித்துள்ளார்.

அந்த படத்தின் டீசர் வெளியானதையடுத்து, ஜெயலலிதாவிற்கும், கங்கனாவுக்கும் துளிக் கூட சம்பந்தமில்லை என்றும், ஜெயலலிதாவின் சிலையில் ஆரம்பத்தில் குளறுபடி செய்ததைப் போல இருக்கிறது என்றும் சமூக வலைதளவாசிகள் கிண்டலடித்து வந்தனர்.

தற்போது கௌதம் மேனன் ‘குயின்’ என்று ஒரு வெப்சீரிஸ் எடுத்துள்ளார், இதில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

தற்போது முதன் முறையாக ஜெயலலிதாவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் நிஜ ஜெயலலிதாவைப் போலவே ரம்யாகிருஷ்ணன் இருப்பதாக பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of