’அஜித் படத்தில் நான் மனம் திறக்கும்’ ரங்கராஜ் பாண்டே

347

சென்னை:- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு விஸ்வாசம் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதற்கு அடுத்ததாக தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் தனது 59வது படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.

இந்த படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் பிரபல தமிழ் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளராக இருந்து அதிலிருந்து சமீபத்தில் விலகிய ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் தான் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பது குறித்து பேசியுள்ளார் ரங்கராஜ் பாண்டே. இது குறித்து அவர் கூறியதாவது:-“இந்த படத்தின் இயக்குனர் வினோத் என் நண்பர். அவர் கேட்டுக்கொண்டதால் இந்த படத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.