நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்

250

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்கேவின் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் இலங்கைக்கு தான் தான் பிரதமர் என்றும், தன்னை நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று ரணில் விக்ரமசிங்கே கூறி வந்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.