இந்தியா வந்துள்ள ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்

518

3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன் தினம் இந்தியாவுக்கு வந்தார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரை இலங்கை பிரதமர் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் இலங்கை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து இருநாட்டு உறவுகளின் மேம்பாடு தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

அண்மையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ள நிலையில், அது குறித்து இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடக்கலாம் என கூறப்படுகிறது.