இந்தியா வந்தார் ரணில் விக்ரமசிங்கே.

191
ranil-2.3.19

இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து செல்வது வழக்கம்.

அவ்வகையில், வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் இருந்து தனது மனைவி மைத்ரீ விக்ரமசிங்கேவுடன் இன்று மாலை திருமலை வந்தடைந்தார்.

அவருக்கு ஆந்திர மாநில மந்திரி அமர்நாத் ரெட்டி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றிரவு இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கும் விக்ரமசிங்கே தம்பதியர் நாளை அதிகாலை வெங்கடாஜலபதியை வழிபாடு செய்கின்றனர்.

இலங்கை பிரதமரின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of