நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உள்ளது – ரணில் விக்ரமசிங்கே

745

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென விக்ரமசிங்கேவை நீக்கினார், சிறிசேனா.

மேலும் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து நாடாளுமன்றத்தை வருகிற16 ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக சிறிசேனா அறிவித்தார். இந்த நிகழ்வுகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் நாடாளுமன்ற முடக்க உத்தரவை நேற்று சிறிசேனா திரும்ப பெற்றார். அத்துடன் வருகிற 5-ந் தேதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான உத்தரவையும் அவர் பிறப்பித்தார்.

அதன்படி 5-ந் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ள நிலையில், ரனில் விக்ரமசிங்கே தனக்கு இன்னும் பெரும்பான்மை இருப்பதாகவும், தானே பிரதமராக நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர்தான் பிரதமராக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of