ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கே தான் இலங்கையின் பிரதமர்

579

ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கே தான் இலங்கையின் பிரதமர் என அந்நாட்டு சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தை 7-ம் தேதியே கூட்டுவதாக அறிவித்து, தாமதிப்பது ஏன் என்றும், நாடாளுமன்றத்தை கூட்ட தாமதிப்பது ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் அடைப்பதற்கு சமம் எனவும் கூறியுள்ளார்.

ராஜபக்ஷே பெரும்பான்மையை நிருபிக்கும்வரை ரணில்விக்ரமசிங்கேதான் பிரதமர் என்று கூறியுள்ள கருஜெயசூர்யா, பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி, ராஜபஷேவின் நியமனம் சட்டவிரோதம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டு சபாநாயகரின் இந்த கடிதம் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of