இனி என் வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை

387

இனி என் வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களின் சந்திப்பில் பங்கேற்று பேசிய அவர், பிரதமர் பதவியில் அமர்த்தும் நபர், தம்முடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுடன் தம்மால் இணைந்து செயற்பட முடியாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வேறு ஒருவரை அழைத்துவர முடியும் எனவும் அதிபர் சிறிசேன தெரிவித்தார். பாரிய ஊழல் மோசடியில் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொடர்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும், சிறிசேன தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of