ரஞ்சி கோப்பையை மீண்டும் தன்வசமாக்கிய விதர்பா

107

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி நாக்பூர் வித்ரபா மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

முதலில் களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 312 ரன்களும், அடுத்து ஆடிய சவுராஷ்டிரா அணி 307 ரன்களும் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக சவுராஷ்டிரா அணியின் ஸ்னெல் படேல் 102 ரன்கள் எடுத்தார்.

அதன் பின்பு, இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா அணியின் தொடக்க வீரர்களான பைசல், சஞ்சய ராமசாமி சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அடுத்தடுத்து வந்த வீரர்களும் சவுராஷ்டிராவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினர். இதனால் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விதர்பா அணி ஆட்டமிழந்தது.

பின்பு 206 ரன்னை இலக்காக கொண்டு களமிறங்கிய சவுராஷ்டிரா அணியை பேட்டிங்கால் பயப்பட வைக்க முடியவில்லை என்றாலும், தங்களுடைய அசுர வேக பந்து வீச்சால் அலறவைத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா டக்- அவுட்டாகினார். ஐந்தாம் நாளான இன்று, சவுராஷ்டிரா அணி தோல்வியை தவிர்க்க தொடர்ந்து களத்தில் போராடி வந்தது. இருப்பினும் விதர்பா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்கா முடியாமல் 127 ரன்களுக்கு
தங்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெற்றியை எதிரணிக்கு கொடுத்தனர்.

இந்த இறுதி போட்டியில் அதிகபட்சமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 49 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய ஆதித்யா சர்வேட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.