கேரள மாநிலத்தில் பரவி வரும் எலிக்காய்ச்சலுக்கு 15 பேர் பலி

339

கேரளாவில் வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மக்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில் லெப்டோஸ்பிரோசிஸ் எனும் விலங்குகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவும் எலிக்காய்ச்சல் கேரள மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை கோழிக்கோட்டில் மட்டும் 28 பேரும், ஆலப்புழா, திருச்சூர், பத்தணம்திட்டா ஆகிய இடங்களில் மொத்தம் 40 பேரும் இந்த எலிக்காய்ச்சல் அறிகுறியோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரு தினங்களில் மட்டும் 8 பேர் என மொத்தம்15 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோயுற்ற விலங்குகளின் எச்சங்கள் படும் போதும், இறந்த விலங்குகள் மூலமும் இந்த காய்ச்சல் பரவுகிறது. கேரளாவில் 20 லட்சம் பேர் வெள்ள நீரில் இருந்ததால் அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போதிய மருந்துகளை இருப்பு வைத்திருக்க முயற்சிப்பதோடு, காய்ச்சல் உள்ளவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of