குட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..! வியப்பூட்டும் வீடியோ..!

5510

தாய் பாசத்தை எடுத்துக்கூறும் எத்தனையோ படைப்புகள் உலகில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஒரு தாய், தன் குழந்தை ஆபத்தில் இருக்கும்போது, எவ்வளவு பெரிய துயரங்கள் வந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி அக்குழந்தையை காப்பாற்றுவாள் என்ற கூற்றுகளும் தமிழ் சமூகத்தில் கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த அத்தனை சொற்களுக்கும் உருவம் கொடுப்பதைப் போன்றதொரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மழை பெய்துக்கொண்டிருப்பதால் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

திடீரென தேங்கி இருக்கும் தண்ணீரில் இருந்து ஒரு எலி, தனது குட்டியை கவ்விக்கொண்டு மேலே எழும்புகிறது.

பின்னர், அந்த குட்டியை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்கிறது. தனது உயிரை பணையம் வைத்து குட்டியை தாய் எலி காப்பாற்றும் இந்த வீடியோவை பார்த்த அனைவரும் வியப்பில் உள்ளனர்.

Advertisement