வாகன சோதனையில் மூட்டை, மூட்டையாக சிக்கிய ”ரேஷன் அரிசி”

151

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொன்னேரி அருகே உள்ள பெரியகாவனம் கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி  சோதனையிட்டதில், மூட்டை, மூட்டையாக 2ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஓட்டுநரிடம் விசாரித்ததில், அந்த அரிசி மூட்டைகள் ஆந்திராவிற்கு கடத்தப்படவிருந்தது தெரியவந்தது. பின்னர் வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த வீரமணி என்பவரை கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of