ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

370

செய்யாறு போலீசார் புறவழிச்சாலையில் வாகனசோதனை நடத்தினர். அப்போது ஆற்காடை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியை மடக்கி சோதனை செய்தனர்.அப்போது லாரியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. 50 கிலோ எடைகொண்ட 100 மூட்டைகள் உள்ள 5 டன் ரேஷன்  அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து  லாரியின் ஓட்டுநரைப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், கருக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரிடம் இருந்து அரிசியை வாங்கிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரையும் பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of