ரேஷன் கடை ஊழியர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்!

1403

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு  ரேஷன் பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ரேஷன் கடை ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த குழு, கடந்த ஆண்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த  குழு அளித்த அறிக்கையின்படி, பொங்கல் பண்டிகைக்கு முன் ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த கோரிக்கைகள் குறித்தும் தமிழக அரசு இதுவரை அறிவிக்காததால், ரேஷன் கடை ஊழியர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் 10ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 13ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement