ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் – ரவிசங்கர் பிரசாத்

327

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் – ரவிசங்கர் பிரசாத்

ஆதார் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தீர்ப்பளித்தது. இந்நிலையில், பஞ்சாப்பில் நடைபெற்று வரும் இந்திய அறிவியல் மாநாட்டில் மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், லைசென்ஸ் உடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளோம் என்று கூறினார். மேலும் ஆதார் இணைப்பில் பயோமெட்ரிக்கை, கைரேகை உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது என்பதால், போலியான லைசென்ஸ் பெற முயற்சிப்பது தவிர்க்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் லைசென்ஸ் வழங்குவது இன்னும் ஒரு வரைமுறைக்கு வரவில்லை என்பதால், அதனை முறை செய்து தகுதி வாய்ந்த பயிற்சி பள்ளிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of