காங்கிரசில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி

278

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சில் சுழலையும், பேட்டிங்கில் அதிரடியையும் மாறி மாறி காட்டி வந்த நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜாவின் சொந்த ஊர் குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டமாகும். இவருக்கு 3 மூத்த சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவரான நாயினா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஜாம்நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தின் போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை அவர் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வின்போது, நாயினாவின் தந்தை அனிரூத்சிங் ஜடேஜா மற்றும் சமீபத்தில் காங்கிரசில் இணைந்த ஹர்திக் படேல் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னாள் மருத்துவ உதவியாளரான நாயினாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் இணைந்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த நாயினா, ‘‘எனது தந்தை கட்சியில் இணையவில்லை. எனினும் அவர் எனக்கு தார்மீக ஆதரவு அளிப்பார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன்’’ என்றார்.

ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், என்ஜினீயருமான ரியா ஜடேஜா கடந்த மாதம் 3–ந்தேதி பா.ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of