”தவறு செய்து விட்டேன்” மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புவதாக ராயுடு கடிதம்!

542

இந்திய அணியில் இடம் கிடைக்காத அதிருப்தியில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு. அவரின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் சென்னயில் செய்தியாளர்களை சந்தித்த அம்பதி ராயுடு, மீண்டும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாட முடிவு செய்திருப்பதாக தெரிவித்து இருந்தார்.

உணர்ச்சி வேகத்திலும் அவசரத்திலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவித்ததாக அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது குறித்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு அம்பதி ராயுடு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ”உணர்ச்சி வேகத்திலும் அவசரத்திலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டேன். மீண்டும் விளையாட ஆவலாக இருக்கிறேன். ஐதராபாத் அணிக்காக அனைத்துவகை போட்டிகளிலும் விளையாட தயாராக இருக்கிறேன்.

நெருக்கடியான சூழலில் எனக்கு துணையாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கும், வி.வி.எஸ் லக்‌ஷ்மணன் மற்றும் நோயல் டேவிட் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Advertisement