பழைய ரூபாய் நோட்டுகளுக்கு முடிவு காலமா..? மக்களின் பயத்தை போக்கிய RBI..!

1181

மங்களூருவில் பாதுகாப்புக் குழு மற்றும் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் மகேஷ், 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தகர்களும், வியாபாரிகளும் அந்த நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக தெரிவித்தார்.

இது மற்ற வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என கூறினார். இதனால் பெரும்பாலான வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் தேங்கி கிடப்பதாக குறிப்பிட்டார்.

10 ரூபாய் நாணயம் செல்லாது என கூறப்படுவது வதந்தி என்பதை வங்கிகள் மக்களுக்கு உணர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

10 ரூபாய் நாணயத்தை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கொண்டு வருவதற்கான வழிகளை வங்கிகள் கண்டுபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Advertisement