புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை RBI குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதி வரையிலான கணக்கின்படி, 664 கோடியே 80 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை, இந்திய ரிசர்வ் வங்கி குறைத்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மைகாலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கப்படுவதாக எழுந்துள்ள புகாரால், மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வித்திட நேரிடும் என்பதால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of