அம்மாவாக ரீ- என்ட்ரி கொடுக்கும் ரஜினி ஹீரோயின்!

724

நடிகை நக்மா தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால், அதிக படங்களில் நக்மா நடித்திருந்தாலும், கவர்ச்சியின் மூலமே அதிக ரசிகர் பட்டாளத்தை அவர் ஈர்த்துள்ளார்.

பாட்ஷா, சிட்டிசன் படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன.சமூகவலைதளங்கள் இல்லாத காலக்கட்டத்திலேயே இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் காதல் என்று அதிகம் கிசுகிசுக்கப்பட்டார். இந்த கிசுகிசு கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதையடுத்து சினிமாவை விட்டு விலகிய நக்மா அரசியலில் களமிறங்கினார். சினிமா பின்னணியை கொண்டு அரசியலில் குதித்த நக்மா தற்போது மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ளார்.

அரசியலால் பதம்பார்க்கப்பட்ட நக்மா பதினேழு வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அல்லு அர்ஜுனுக்கு நக்மா அம்மாவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.