சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயார் – டிக் டாக் நிறுவனம்

1029

இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் – டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிக் – டாக் நிறுவனத்தின் இந்திய பிரிவு, தனிநபர் தரவுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் இந்திய சட்டங்களுக்கு இணைந்து தொடர்ந்து செயல்பட தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.

இந்திய பயனாளர்களின் எந்த ஒரு தரவுகளையும், டிக்-டாக் நிறுவனம், சீனா உட்பட எந்த ஒரு நாட்டுடனும் பகிர்ந்து கொள்வது கிடையாது என்றும் கோரிக்கை வரும்பட்சத்தில் வரும் காலத்தில் இதே அணுகுமுறையை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள், மரியாதைக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிப்போம் என்றும் கூறியுள்ளது.

Advertisement