‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு

464

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, இயக்குனர் பாரதிராஜாவால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கம் என்பது தாய் வீட்டை பிரிக்கும் செயல் என தெரிவித்தனர்.

ஒருசிலர் சுயநலத்திற்காக தயாரிப்பாளர் சங்கம் பிளவு படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜாவை போட்டியின்றி தேர்வு செய்ய தயார் என அறிவித்துள்ளனர்.

Advertisement