ஆதரவளிக்க தயார், வேல்முருகன் அதிரடி!

486

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என்று தகவல் வெளியான நிலையில், திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ள நிலையில், வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, டிடிவி தினகரனுடன் கூட்டணி பேசப்பட்டதாக கூறப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில், கூடுதல் இடங்களை ஒதுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியதால், கூட்டணியில் இழுபறி நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து செயற்குழுவை கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பண்ருட்டி வேல்முருகன் கூறியிருந்தார்.

Velmurugan-Met-Stalin2

இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில், இருபது தொகுதிகள் தோழமை கட்சி களுக்கும் மற்ற 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of