தயார் நிலையில் பி.எஸ்.எல்.வி. சி.48 ராக்கெட்

342

பூமியை கண்காணிக்கும் ரிசாட் 2 பிஆர்1 செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.

இதனுடன் வணிக ரீதியில் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோளும் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

ரிசாட் 2 பிஆர்1 செயற்கைகோளில் உள்ள நவீன ரேடார் மூலம் துல்லியமாக பூமியை படம் பிடிக்க முடியும் என்பதால் இந்தியாவின் பாதுகாப்பு துறை கண்காணிப்பு மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று மாலை 3:25 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளதால், இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.