இந்த தோல்வி உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது – ஜேசன் ஹோல்டர்

350

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நாட்டிங்காமில் நடந்தது ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 79 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் சுமித் – அலெக்ஸ் கேரி ஜோடி சிறப்பாக விளையாடியது.

கேரி 45 ரன்னிலும், சுமித் 73 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 8-வது வீரராக களம் இறங்கிய நாதன் கவுல்டர் – நைல் அதிரடியாக விளையாடினர். அவர் 60 பந்தில் 92 ரன் எடுத்தார்.

ஆஸ்திரேலியா 49 ஓவரில் 288 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியால் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 273 ரன்னே எடுத்தது. இதனால் 15 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேசியபோது, இந்த தோல்வி உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது.

போட்டியில் நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம் என்று நினைத்தேன். அனேகமாக நாங்கள் சிறிது உத்வேகத்தை காட்ட வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற சில ஷாட்டுகளை அடித்து அவுட் ஆகிவிட்டோம் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of