வடக்கு ஆஸ்திரேலியா மழையாலும், தெற்கு ஆஸ்திரேலியா வறட்சியாலும் வாடுகிறது

147

ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள டவுன்ஸ்வைல் நகரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டவுன்ஸ்வைல் நகரத்தில் 3 அடி அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.சராசரியாக டவுன்ஸ்வைல் நகரில் பதிவாகும் மழையின் அளவை விட 20 மடங்கு இம்முறை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலியை நடுங்க வைத்த அதிகப்படியான மழை இது தான்.

இம்மழையால் இதுவரை 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளனர்.

இந்த அதிகப்படியான மழையினால், சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவது கடும் சிக்கலாக உள்ளது. ராணுவ  மீட்புப்படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு ஆஸ்திரேலியா இவ்வாறு மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்க, தெற்கு ஆஸ்திரேலியா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் ஆஸ்திரேலியாவின் தென்கோடியில் நீடித்து வருகிறது.