தமிழகத்திற்கு ரெட் அலார்ட் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

683

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மாவட்டந்தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் முக்கிய அமைச்சர்கள், பல துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். அவர்களிடம் ரெட் அலர்ட் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் கேட்டறிந்தார். கால்வாய் ஆக்கிரமிப்புகள் சீர் செய்யப்பட்டதா?, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார்.