தமிழகத்தில் ரெட் அலர்ட் – நீர் நிலைகள் உடைப்பு

635

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதை தடுக்க 5 லட்சம் மணல் மூட்டைகள் தயாராக இருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பொதுப்பணித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதில்,  பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள  89 அணைகளில் 15 பெரிய அணைகள் பெரும்பான்மையாக நிரம்பி இருக்கிறது என்றும், மேலும் ஏரி குளங்களும்  நிரம்பி இருப்பதால் கன மழை பெய்து கரை உடைப்பு எதுவும் ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதேபோல், செயற் பொறியாளார்கள் தலைமையில் பொறியாளர்கள் அணையின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அணைக்கு வரும் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்த்தின் தகவல் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அணை நிரம்பினால் செயற் பொறியாளார்கள் நீரை பாதுகாப்பு கருதி நிறந்து விடலாம் என்றும்  பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of