கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பினராய் அறிவிப்பு

735

கேரளாவில் இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடைவிடாமல் பெய்த கனமழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்கள் உருகுலைந்தன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கேரளாவில் இயல்வு நிலை திரும்பி வரும் நிலையில், அங்கு மீண்டும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் திருச்சூர், பாலக்காடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் சில மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6,7,8 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் 5ஆம் தேதி தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.

மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவை, மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement