4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!

266

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகும். மேலும், இந்த மாவட்டங்களில் இன்று அதி தீவிர மழையும் பெய்யும். இதேபோன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, கன்னியக்குமரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் கனமழையும் அதன்பின் 2 நாட்களில் கனமழை அதி தீவிர மழையாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று சாரல் மழை பெய்யும். மாலைக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.