6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை – பதட்டத்தில் மக்கள்

1177

கேரளாவில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் மீண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதனால் கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, மலப்புரம் வயநாடு, கண்ணூர் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது

இதேபோல திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதால், மாநில அரசு சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5 நாட்களுக்கு குடகு மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.