தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: வானிலை மையம் தகவல்

616

தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சுமார் 25 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழத்திற்கு ரெட் அலர்ட் முறை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் மழை அதிகளவு பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் நிர்வாக ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் 4 மாவட்டங்களுக்கு விரைந்தது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்ததால் தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை வாய்ப்பு இல்லாததால் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்ப்படுகிறது. கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மட்டும் கனமழை பெய்யும். பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுகிறது எனக் கூறினார்.