4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை

374

கேரளாவில் பெய்த வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை, கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் பீர்மேடு, கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குடுயிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இடுக்கி, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையையொட்டி மாநில அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.