காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

190

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 62 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியை எட்டியுள்ளது.

இதனிடையே கர்நாடகாவில் மழை குறைந்ததால், காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு, நேற்று முன்தினம் 37ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி  கபினியில் 32 ஆயிரம் கன அடி, கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 29 ஆயிரம் என அடி என மொத்தம் 62 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of