மீண்டும் பேட்டை தாலாட்ட களமிறங்கும் கிறிஸ் கெய்ல்…, அதிரடி தொடருமா?

494

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் நிக்கோலஸ் பூரன் ஒருநாள் போட்டிக்கான அணியில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக சாமவேல்ஸ் அணியில் இடம்பெறவில்லை.

39 வயதாகும் கிறிஸ் கெய்ல் 284 ஒருநாள் போட்டிகளில் 23 சதம், 49 அரைசதங்களுடன் 9727 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காளதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் தற்போதுதான் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of