அகதிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்.., 25 பேர் பலி!

133

மெக்சிகோ நாட்டில் உள்ள கிளபாஸ் மாநிலத்தில் மத்திய அமெரிக்க அகதிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 50க்கு மேற்பட்டோர் இருந்தனர்.

சோயலோ என்ற பகுதியில் வரும்போது லாரி தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 25 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் போக்குவரத்தை சீர்செய்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். லாரி கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.