ஸ்டண்ட் காட்சிகள் – தயாராகும் ரெஜினா கசான்ட்ரா

359

2005ம் ஆண்டு வெளியான ‘கண்டா நாள் முதல்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரெஜினா கசான்ட்ரா, நிதானமான நடிப்பால் பல வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். இந்த 2020ம் ஆண்டு மட்டும் தமிழில் இவருக்கு பார்ட்டி. கள்ளப்பாட், கசட தபர, சக்ரா என்று 4 படங்கள் வெளிவர இருக்கின்றன.

தற்போது இவர் திருடன் போலீஸ், உள்குத்து படம் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜு இயக்கும் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை ஆப்பிள் டிரி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் பட்டியலும் first lookம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of