6 பேரின் “சோலியை” முடித்த ஜோலி..! 14 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம்..! பெண்ணின் வெறித்தனம்..!

1313

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அருகே உள்ள கூடத்தொரை பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியான இவருக்கு, அன்னம்மாள் என்ற மனைவியும், ரோய் தாமஸ் என்ற மகனும் இருந்தனர்.

இவர்களோடு சேர்த்து, அன்னம்மாளின் சகோதரர், ஜான் தாமசின் சகோதரர் மருமகள் மற்றும் மருமகளின் குழந்தை என கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல், 2006-ஆம் ஆண்டு வரை ஒவ்வொருவரும் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்து வந்துள்ளனர்.

உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவர்களது உயிரிழப்பில் மர்மம் எதுவும் இல்லை என்று கூறியதையடுத்து சாதாரண மரணம் என்று வழக்கை முடித்து வைத்தனர். ஆனால் இதனை நம்பாத ஜான் தாமசின் உறவினர்கள், விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர்.

தொடர்ந்து வலியுறுத்தியதால், இறந்தவர்களின் உடல்களை மீண்டும் தோன்டி எடுத்த போலீசார், அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களது உடலில் சயனைடு கலந்திருப்பது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், புதைந்து கிடந்த அந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்தனர்.

அதில், இந்த கொலை சம்பவங்களுக்கு, ஜோலி என்ற பெண் தான் காரணம் என்றும், இவர் ஜான் தாமசின் உறவினர் தான் என்றும் தெரியவந்தது.

மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஜான் தாமஸிடம் இருந்த அதிகப்படியான சொத்தை அபகறிக்கவே இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.