தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..!

707

கோவையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை காருண்யா நகர் காவல் நிலையத்தில் வைத்து 3 இளைஞர்களை விசாரித்து வந்த நிலையில் போலீசார் தற்போது அவர்களை விடுத்துள்ளனர்.

லஸ்கர் அமைப்புடன் தொடர்புடையதாக கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் ரஹீம் உள்ளிட்ட 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அப்துல் காதருடன் தொலைபேசியில் பேசியதாக சந்தேகம் ஏற்பட்டதால் கோவையில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் அவர்களிடம் தேவைப்படும்போது போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் 3 இளைஞர்களை போலீசார் விடுவித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of