முருகனை சந்திக்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் | Rajiv Gandhi

137

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முருகனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சந்திக்க அனுமதி வழங்கவேண்டுமென கோரியும், முருகனின் உறவினர் தேன்மொழி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறை துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முருகன் வைக்கப்பட்டிருந்த சிறையில் செல்போன், கத்தி உள்ளிட்ட 13 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதனால் 3 மாதத்திற்கு அவரை யாரும் சந்திக்கக்கூடாது என்கிற தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத கால தண்டனையை திரும்பப்பெற்று கொள்ள வேண்டும் என்றும், முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்