கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் ஆயிரம் பேர் கரை திரும்பாததால் உறவினர்கள் சோகம்

760

தமிழகத்தில் நாளை மறுநாள் அதீத கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 100 விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்களுக்கு ரெட் அலர்ட் குறித்த தகவல் சென்றடையாததால் கரை திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனிடையே, மீனவர்களுக்கு ரெட் அலர்ட் தகவல் சென்றடைய மாவட்ட நிர்வாகம் முறையாக செயல்பட வில்லை என மீனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகளை திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை, கொச்சி, மும்பை ஆகிய பகுதிகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அலுவலகத்திற்கு 1077 மற்றும் 04652 – 231077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள 04652-227460 என்ற எண்ணும், சின்னத்துறைக்கு – 83000 22238, வள்ளவிளைக்கு – 94892 10152 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of