ரபேல் போர் விமான ஒப்பந்தம் – நிர்மலா சீதாராமனுக்கு, வக்கீல் நோட்டீஸ்

660

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பல்வேறு எதிர்கட்சிகள் மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சைகள், நிலவி வருவதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், டசால்ட் ஏவியேசன், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போர் விமானங்களை தயாரிக்க அனுமதிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இந்த கோரிக்கைகளை 3 நாட்களில் நிறைவேற்றாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of