மத்திய அரசு கொடுத்துள்ள நிதி யானைப் பசிக்கு சோளப் பொறி போன்று உள்ளது – ராஜேந்திர பாலாஜி

269

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் பழனிசாமி சம்பந்தட்ட துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். கஜா புயலுக்காக மத்திய அரசிடம் கேட்ட நிதி கிடைக்கவில்லை என்றும், மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி யானைப் பசிக்கு சோளப் பொறி போன்று இருப்பதாக தெரிவித்தார்.