பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 கோடி ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் – விஜயகாந்த்

806

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 கோடி ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன.

அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

கஜா புயலில் இருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய  வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 கோடி ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் விஜயகாந்த் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement